Kingdom Animalia - விலங்குலகம் | Chordata - முதுகு நாணுடையவை - Part 3 | Tetrapoda-நான்கு காலிகள் | Class 11
• (கிரே. ஆம்பி - இரண்டு; பையோஸ் : உயிர்)
(G. amphi - both; bios-life)
• இருவாழ்விகள் - நீர், நிலம் ஆகிய இரு வாழிடங்களிலும் வாழக்கூடிய விலங்குகளைக் கொண்ட முதல் நான்கு காலி,முதுகெலும்பிகளாகும்.
• உடல் வெப்பம் மாறும் தன்மை கொண்டவை.
• உடல் பகுதி - தலை, உடல் என இரண்டு பகுதிகள்.
• ஈரிணை கால்களைக் கொண்டுள்ளன.
• வாலுடனோ, (அ) வாலற்றோ காணப்படும்.
• சுரப்பிகளை கொண்ட ஈரமான தோல், சொரசொரப்பாகவோ, (அ) வழவழப்பாகவோ
காணப்படும்.
• இமைகளையுடைய கண்களையும், டிம்பானிக் சவ்வால் ஆன காதுகளையும் கொண்டவை.
• இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.
• தோல், செவுள் (அ) நுரையீரல் வழியாகச் சுவாசம் நடைபெறுகிறது.
• யூரியா - கழிவு பொருளாக வெளியேற்றும் இவை மீசோநெஃப்ரிக் வகை சிறுநீரகத்தைக் கொண்டவை.
• ஆண், பெண் உயிரிகள் தனித்தனியாக உள்ளன.
• புறக் கருவுறுதல் நடைபெறுகிறது.
• அனைத்தும் முட்டையிடக் கூடியவை.
• மறைமுகக் கருவளர்ச்சி காணப்படுகிறது.
• சிறப்புத் தன்மைகள் - குளிர் உறக்கம் (hibernation) மற்றும் கோடை
உறக்கம் (aestivation).
• (எ.கா): புயூபோ (Bufo)
(தேரை), ரானா (Rana) (தவளை), ஹைலா (Hyla) (மரத்தவளை), சலமாண்ட்ரா (Salamandra)
(சலமாண்டர்), இக்தியோஃபிஸ் கால்களற்ற இருவாழ்விகள் (Ichthyophis).
வகுப்பு: ரெப்டிலியா (ஊர்வன) (Class:Reptilia)
• (Class: Reptilia) (இல. ரெப்ரே (அ) ரெப்டம் ஊர்வன)
(L.repere or reptum-to creep or crawl)
• தரையில் வாழக்கூடியவை.
• உடல் உலர்ந்த உறுதியான தோலால் மூடப்பட்டுள்ளது.
• தோலின் புறப்படலத்திலிருந்து உருவான செதில்களும், சிறு சுவாசத் தகடுகளும் உள்ளன.
• மூன்று அறைகளைக் கொண்ட இதயம்காணப்படுகின்றது
- முதலைகளில் நான்கு முழுமையான அறைகளைக்கொண்ட இதயம்.
• உடல் வெப்பம் மாறும் அம்னியோட்டுகள்.
• ஓடுடைய முட்டை
இடுகின்றன (Cleidoic
egg).
• கருவளர்ச்சியின் போது அம்னியான் (Amnion), அலன்டாய்ஸ் (Allantois), கோரியான் (Chorion) மற்றும் கருவுணவுப்பை (Yolk sac) போன்ற கருசூழ்
படலங்கள் (Embryonic membranes) உருவாகின்றன.
• யூரிக் அமிலத்தைக் கழிவு பொருளாக (Uricotelic) வெளியேற்றும் மெட்டாநெஃப்ரிக் சிறுநீரகத்தைப் பெற்றுள்ளன.
• ஆண், பெண் உயிரிகள் தனித்தனியானவை.
• உட்கருவுருதல் நடைபெறும் - அனைத்தும் முட்டையிடும் தன்மையுடையவை.
• எடுத்துக்காட்டுகள்: கீலோன் (Chelone) (நீராமை), டெஸ்டிடோ (Testudo) (நில ஆமை), ஹெமிடாக்டைலஸ் (Hemidactylus (வீட்டுபல்லி),கெமீலியான்(Chameleon)
(பச்சோந்தி), கெலோட்டஸ் Calotes) (ஓணான்), ட்ராகோ (Draco) (பறக்கும் பல்லி), குரோக்கோடிலஸ் (Crocodilus) (முதலை), நச்சுப்பாம்புகள்.
நாஜா (Naja) (நாகம்), பங்காரஸ் (Bangarus) (கட்டு
விரியன்), வைப்பரா (Viper)
- கண்ணாடி வீரியன்.
வகுப்பு: பறப்பன (Class: Aves)
• (இல. ஏவ்ஸ் : பறவை) (L.Avis - bird)
• பறவைகளின் மிக முக்கியமான பண்பு இறகுகள் (ம) அதன் பறக்கும்
திறன்.
• முன்னங்கால்கள் - நெருப்பு கோழி, கிவி மற்றும் பெங்குயின் போன்ற பறக்க இயலாத பறவைகள் தவிர மற்றவைகளில் இறக்கைகளாக மாறுபாடு அடைந்துள்ளன.
• பின்னங்கால்கள் - மரக்கிளைகளைப் பற்றிப் பிடிக்கவும் ஏற்றவாறு தகவமைப்பைப் பெற்றுள்ளன.
• வாலின் அடியில் உள்ள எண்ணெய் சுரப்பி (அ) பிரீன் (Preen)
சுரப்பியைத் தவிர
உலர்ந்த தோலில் வேறெந்த சுரப்பிகளுமில்லை.
• புறப்படலத்திலிருந்து தோன்றிய புறச்சட்டகத்தில் - இறகுகள், செதில்கள், கால் நகங்கள் மற்றும் அலகின் மேல் காணப்படும் கடின உறை.
• முழுவதும் எலும்பாக்கம் செய்யப்பட்ட காற்றறைகளுடன் கூடிய (Pneumatic bone) (நுமாட்டிக் எலும்பு) நீண்ட எலும்புகள் அகச்சட்டகமாக உள்ளன.
• பறத்தல் தசைகளான பெக்டோராலிஸ் மேஜர்
(Pectoralis major) மற்றும் பெக்டோராலிஸ்
மைனர் (Pectoralis minor) ஆகியவை நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன.
• பஞ்சு போன்ற நெகிழும் தன்மையுடைய நுரையீரல் சுவாச உறுப்பு.
• சுவாசத்திற்குத் துணையாக உள்ள காற்றுப் பைகளுடன் நுரையீரல்கள் தொடர்பு கொண்டுள்ளன.
• இதயம் நான்கு அறைகளைக் கொண்டது.
• வெப்பம் மாறா விலங்குகள்.
• வலசைபோதல் (ம) பெற்றோர் பராமரிப்பு போன்ற பண்புகள் மேம்பட்டுக் காணப்படுகின்றன.
• இவற்றில் சிறுநீரகப்பை கிடையாது.
• ஒருபால் உயிரிகள் ஆகும்.
• பால் வேற்றுமை (அ) பால் ஈருரு அமைப்பு சிறப்பாக அமைந்துள்ளது.
• ஆண் பறவைகளில் ஓரிணை விந்தகங்களும், பெண் பறவைகளின் இடது பக்கத்தில் ஒற்றை அண்டகமும் காணப்படுகிறது.
• வலது பக்க அண்டகம் குறை வளர்ச்சியுடன் காணப்படும்.
• பறவைகள்அனைத்தும் முட்டையிடுபவை.
• ஓடுடைய இம்முட்டைகள் மெகாலெசித்தல் வகையைச் சார்ந்தது.
• உட்கருவுறுதல் நடைபெறுகிறது.
• எடுத்துக்காட்டுகள்: கார்வஸ் (Corvus) (காகம்), கொலம்பா (Columba) (புறா), சிட்டாக்குலா (Psittacula) (பச்சை கிளி), பவோ (Pavo) (மயில்), ஏப்டினோடைட்ஸ் (Aptenodytes) (பென்குயின்), நியோப்ரான் (பிணந்திண்ணி கழுகு), சால்கோபாப்ஸ்
இன்டிகா (Chalcophaps
indica) (மரகதப் புறா தமிழ்நாடு
மாநிலப்பறவை)
வகுப்பு : பாலூட்டிகள்
(Class:
Mammalia)
• (இல. மெம்மே : பால் சுரப்பி) (L.
Mamma-Breast)
• பல்வேறு வகைபட்ட வாழிடங்களில் வாழும் தன்மை கொண்டன.
• உடல் முழுமையும் ரோமங்களால் மூடப்பட்டுள்ளது பாலூட்டிகளின் தனித்தன்மை.
• சில பாலூட்டிகள் பறத்தல் மற்றும் நீரில் வாழ்வதற்கான தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
• பால் சுரப்பிகளைப் பெற்றிருத்தல் - மிக முக்கியமான இன்னொரு தனிச்சிறப்புப் பண்பாகும்.
• நடப்பதற்கும், ஓடவும், தாவுவதற்கும், வளை தோண்டவும், நீந்தவும், மற்றும் பறக்கவும் ஏற்ற தகவமைப்புகளைக் கொண்ட ஈரிணைக்
கால்கள் உள்ளன.
• தோலில் வியர்வை, வாசனை (ம) எண்ணெய் சுரப்பி போன்ற பலவகைச் சுரப்பிகளையும் பெற்றுள்ளன.
• கொம்புகள், முட்கள், செதில்கள், பற்றும் கூர்நகங்கள், நகங்கள், குளம்புகள்
மற்றும் எலும்பாலான புறப்படலத் தகடுகள் போன்ற புறச்சட்டகங்களையும்
பெற்றுள்ளன.
• தீக்கோடான்ட் (Thecodont), ஹெடிரோடான்ட் (Heterotont) மற்றும் டைபியோடான்ட் (Diphyodont) வகை பற்கள் காணப்படுகின்றன.
• புறசெவிமடல் (Pinnae) காணப்படுகின்றது.
• நான்கறைகளைக் கொண்ட இதயத்தையும், இடது சிஸ்டமிக் வளைவையும் சுற்றோட்ட மண்டலத்தில் கொண்டவை.
• மற்ற விலங்குகளை விட பெரிய மூளை - அதிக நுண்ணறியும் திறன்.
• யூரியாவைக் கழிவுப் பொருளாக வெளியேற்றும் (யூரியோடேலிக்) மெட்டாநெஃப்ரிக் சிறுநீரகமும் கொண்டவை.
• உடல் வெப்பம் மாறா விலங்குகளாகும்.
• ஆண், பெண் உயிரிகள் தனித்தனியானவை.
• உட்கருவுருதல் நடைபெறுகிறது.
• எடுத்துக்காட்டுகள்: முட்டையிடும் பாலூட்டிகள்
ஆர்னிதோரிங்கஸ் (Ornithorhynchus) (பிளாடிபஸ்). குட்டி ஈனும் பாலூட்டிகள் மேக்ரோபஸ் (Macropus)(கங்காரு), டீரோபஸ் (Pteropus) (பறக்கும் நரி), மெக்காக்கா (Macaca)
(குரங்கு), கேனிஸ் (Canis) (நாய்), ஃபெலிஸ் (Felis) (பூனை), எலிபஸ்(Elephas) (யானை)
ஈக்குவஸ் (Equus) (குதிரை), டெல்பினஸ் (Delphinus) (டால்பின்),
பலினாப்டிரா (Balaenoptera) (நீலத்திமிங்கிலம்),
பான்தீரா டைகிரிஸ் (Panthera tigris) (புலி),
பாந்தர் லியோ (Panthera leo)( சிங்கம்), ஹோமோ சேப்பியன்ஸ் (Homo sapiens) (மனிதன்).
Comments
Post a Comment