விலங்குலகம் | Kingdom Animalia | முதுகு நாணுடையவை | Chordata | அறிமுகம் - Part 1 - Class 11 | NEET

தொகுதி : முதுகுநாணுடையவை

•       (Phylum: Chordata)
(
கிரே. கார்டே: நாண்) (G.Chorde - string)

•       மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறப்பன (ம) பாலூட்டிகள் போன்ற நன்கு அறியப்பட்ட விலங்குகளையும்,

•       லான்ஸ்லெட் (ஆம்பியாக்சஸ்) மற்றும் டியூனிகேட்டுகள் (அசிடியன்) போன்ற ஓரளவு அறியப்பட்ட விலங்குகளையும் கொண்ட பெரிய தொகுதி முதுகுநாணுடையவை.

  •   தனது வாழ்க்கை சுழற்சியில் ஏதாவது ஒரு நிலையில் மூன்று அடிப்படைப் பண்புகளைப் பெற்றிருக்கும்.

•       1. நரம்புவடத்திற்குக் கீழாகவும் உணவுப்பாதைக்கு மேலாகவும் - நீண்ட தண்டு போன்ற முதுகுநாண். தொன்மையான அகச்சட்டகம்.

•       லாம்ப்ரே (ம) லான்ஸ்லெட்- விலங்குகளில் வாழ்நாள் முழுவதும் காணப்படும்.

•       முதிர் முதுகெலும்பிகளில் பகுதியாகவோ (அ) முழுமையாகவோ முதுகெலும்புத் தொடராக மாற்றீடு.

•       2.  முதுகுநாணிற்கு மேலாகவும், முதுகுபுற உடற்சுவருக்கு கீழாகவும் அமைந்துள்ள நரம்பு வடமானது குழல்வடிவத்திலும் உள்ளீடற்றும், திரவம் நிரம்பியும், காணப்படுகிறது.

•       இது உடற்செயல்பாடுகளை ஒருங்கிணைக்கப் பயன்படுகிறது.

•       உயர் விலங்குகளில் நரம்பு வடத்தின் முன்பகுதி மூளையாகவும்,  பின்பகுதி தண்டுவடமாகவும் உள்ளது.

•       முதுகெலும்புத் தொடரால் தண்டுவடம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

•       3. அனைத்து வகை முதுகுநாணுடைய விலங்குகளிலும், வாழ்க்கைச் சுழற்சியின் ஏதாவது ஒரு நிலையில் தொண்டை செவுள் பிளவுகள் (Pharyngeal gill slits (or) cleft) காணப்படுகின்றன.

•       முதுகுநாணுடைய விலங்குகள் அனைத்திலும் கருவளர்ச்சியின் போது தொண்டை சுவர்களில் வரிசையாகச் செவுள்பிளவுகள் காணப்படும்.

•       நீர்வாழ் விலங்குகளில், செவுள் பிளவுகள் இழைவடிவ செவுள்களாக (இரத்த நுண்நாளங்களுடன் கூடிய) மாறி, சுவாசத்திற்கு உதவுகின்றன.

•       நிலவாழ் முதுகுநாணிகளின் கருவளர்ச்சியின் போது செயல்படாச் செவுள்பிளவுகள் தோன்றிப் படிப்படியாக மறைகின்றன.  

•       முதுகுநாணுடையவை அனைத்தும் இருபக்க சமச்சீரமைப்பு, உடற்குழி (ம) மூவடுக்குகளையுடைய விலங்குகள்.

•       உறுப்பு மண்டல அளவிலான உடற்கட்டமைப்பு.

•       மலத்துளைக்குப்பின் அமைந்துள்ள வால்.

•       லான்ஸ்லெட் தவிர மற்ற முதுகுநாணிகளில் மையோஜெனிக் இதயத்துடன் கூடிய மூடிய வகை இரத்த ஓட்ட மண்டலம் காணப்படுகிறது.



Comments

Popular posts from this blog

Class XII Bio-Zoology & Zoology - Powerpoint

Class XI - Zoology - Powerpoint

12th Standard, பாடம் - 1, உயிரிகளின் இனப்பெருக்கம்- Book back One word Online test

11ம் வகுப்பு, பாடம் 1, உயிருலகம் - Book back One word Online test

Class XII - Botany Powerpoint