பாடம் - 2, விலங்குலகம் - முதுகு நாணற்றவை - தொகுதிகள் - in Tamil - for class 11 | NEET


முதுகு நாணற்றவை

•      தொகுதி: துளையுடலிகள் (Porifera)

•      தொகுதி: நிடேரியா (Cnidaria)

•      தொகுதி: டினோஃபோரா (Ctenophora)

•      தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ் (தட்டை புழுக்கள்)

•      தொகுதி: ஆஸ்கெல்மின்தஸ் - (உருளைப் புழுக்கள்)

•      தொகுதி: அன்னலிடா - (வளைதசை புழுக்கள்)

•      தொகுதி: கணுக்காலிகள் (Jointed legs)

•      தொகுதி: மெல்லுடலிகள் (Mollusca)

•      தொகுதி: எக்கினோடெர்மேட்டா - (முட்தோலிகள்)


  தொகுதி: துளையுடலிகள் (Porifera)

•      (இல. போரோஸ்: துளை, ஃபெர்ரே: பெற்றுள்ளது)
(L.poros-pore; ferre-to bear)

•      நீர்வாழ் விலங்குகள்.

•      சில நன்னீரில் வாழக்கூடியன.

•      பலசெல் உயிரிகளான - ஓரிடத்தில் ஒட்டி வாழ்பவை.

•      செல் அளவிலான அமைப்புடையவை.

•      உடல் சமச்சீரற்றுக் காணப்படும்.

•      நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலம் - சிறப்புப் பண்பாகும்.

•      ஆஸ்டியா (Ostia) - ஸ்பான்ஞ்சோசீல் (மையக் குழி) - ஆஸ்குலம் (Osculum) வழியாக வெளியேற்றப்படுகிறது.

•      உணவூட்டம், சுற்றோட்டம், சுவாசம் மற்றும் கழிவு நீக்கம் இந்நீரோட்டம் பயன்படுகிறது.

•      கொயனோசைட்டுகள் (அ) கழுத்துப்பட்டை செல்கள் – சிறப்பு தன்மை கொண்ட கசையிழை செல்கள்-ஸ்பான்ஞ்சோசீல் மற்றும் கால்வாய் பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.

•      கால்சியம் (ம) சிலிகான் முட்களாலோ (அ) ஸ்பாஞ்சினாலோ (அ) இரண்டும் கலந்தோ-ஆன சட்டகம் உடலுக்கு உறுதுணையாக உள்ளது.

•      செல் உள் (ம) ஹோலோசோயிக் (Holozoic) உணவூட்ட முறை காணப்படுகிறது.

•      இருபால் உயிரிகள் (Hermaphrodites).(ஆண், பெண் இனச் செல்கள் ஒரே உயிரிலிருந்து தோன்றும்).

•      மொட்டு விடுதல் (அ) ஜெம்யூல் (Gemmule) உருவாக்கம் - பாலிலா இனப்பெருக்கமும், இனச் செல்களை உருவாக்குதல் - பாலினப் பெருக்கம்.

•      பாரன்கைமுலா, ஆம்பிபிளாஸ்டுலா  - லார்வாக்களைக் கொண்ட மறைமுகக் கருவளர்ச்சி.

•      (எ.கா): சைக்கான் (ஸ்கைஃபா-Scypha), ஸ்பான்ஜில்லா (நன்னீர் கடற்பஞ்சு), யூஸ்பான்ஜியா (குளியல் கடற்பஞ்சு), யூப்ளக்டெல்லா (வீனஸ் பூக்கூடை).


தொகுதி: நிடேரியா (Cnidaria)

•      (கிரே. நோடெ- முட்கள் அல்லது கொட்டும்
செல்கள்) (
G.knode -needle or sting cells)

•      சீலன்ட்ரேட்டுகள் (குழியுடலிகள்) அழைக்கப்பட்ட நிடேரியாக்கள் – நீர் வாழ் உயிரிகள்.

•      ஓரிடத்தில் ஒட்டியோ, ஒட்டாமல் தன்னிச்சையாகவோ, தனித்தோ,
கூட்டுயிரியாகவோ வாழும்
.

•      ஆரச்சமச்சீருடைய விலங்குகள்.

•      உடல் நிடோசைட் (Cnidocytes) (அ) நிடோபிளாஸ்ட் (Cnidoblasts) – கொட்டும்செல்கள், உணர்நீட்சிகளில் நெமட்டோசிஸ்ட் (nematocyst) - கொட்டும் செல்கள் - நிடேரியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

•      ஒட்டிக்கொள்ளுதல், பாதுகாப்பு, இரைபிடித்தல் -
நிடோபிளாஸ்டுகள்
பயன்.

•      ஈரடுக்குகளைக் கொண்ட திசு அளவிலான உடற்கட்டமைப்பைப் பெற்ற முதல் தொகுதி விலங்குகள்.

•      செரித்தல் மற்றும் சுற்றோட்டம் ஆகிய இரு பணிகளையும் செய்யும், வயிற்றறைக்குழி (அ) சீலண்டிரான் (Coelenteron), உடலின்
மையப்பகுதியில் அமைந்துள்ளது.

•      ஹைப்போஸ்டோம் (Hypostome) (அல்லது) வாய் எனும் பெருந்துளை - வெளியே திறக்கிறது.

•      உணவைப் பெறுதல், கழிவு நீக்கம் - இரண்டு பணிகளும் வாய் வழியே நடைபெறுகின்றன.

•      செல்வெளி செரித்தல், செல் உள் செரித்தல்.

•      வலைப் பின்னல் அமைப்பாகப் பரவியுள்ள, மிக எளிய நரம்பு மண்டலம்.

•      பவளம் போன்ற நிடேரியாக்களில் கால்சியம் கார்பனேட்டால்ஆன சட்டகம்.

•      பாலிப் (Polyp) (ம) மெடுசா (Medusa), எனப்படும் இருவகை உடலமைப்புகளைப் பெற்றுள்ளது.

•      பாலிப்குழல் வடிவ அமைப்புடன் நிலையாக ஓரிடத்தில் ஒட்டி வாழும் தன்மை. (எ.கா: ஹைட்ரா, ஆடம்சியா). குடைவடிவம் கொண்ட மெடுசா - நீந்தித் திரியும் தன்மையுடையது.

•      வாழ்க்கைசுழற்சியில் மெட்டாஜெனிசிஸ் (Metagenesis) (அ) பால்-பாலிலி தலைமுறை மாற்றம் (Alternations of generations).

•      பாலிப் – பாலிலா தலைமுறையையும்,மெடுசா –பாலினப்பெருக்க தலைமுறையையும் வெளிப்படுத்துகின்றன.

•      பாலிப் பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் மெடுசாவையும், மெடுசா பால் இனப்பெருக்கத்தின் மூலம் பாலிப்பையும் உருவாக்குகின்றன.

•      மறைமுகக் கருவளர்ச்சி நடைபெறுகிறது.

•      குற்றிழைகளை உடைய பிளானுலா - லார்வா பருவம்.

•      எடுத்துக்காட்டுகள்: பைசாலியா (Physalia)(போர்த்துகீசியப் போர்வீரன்), ஆடம்சியா (Adamsia) (கடல் சாமந்தி), பென்னாட்டுலா (Pennatula) (கடல் பேனா) மியான்ட்ரினா (Meandrina) (மூளை பவளம்).

தொகுதி: டினோஃபோரா (Ctenophora)

•      (கிரே.டினோ : சீப்பு; போராஸ்: பெற்றுள்ளமை)
(
G.Ktenos-comb; phoros-bearing)

•      விலங்குகளனைத்தும்கடல்வாழ் உயிரிகள்.

•      திசு அளவிலான உடல்கட்டமைப்பு,

•      ஈராரச்சமச்சீரமைப்புடைய ஈரடுக்கு விலங்குகள்.

•      இதன் மீசோகிளியா நிடேரியாவிலிருந்து மாறுபட்டுள்ளது.

•      மீசோகிளியாவில்அமிபோசைட்டுகளும் மென்தசை செல்களும் உள்ளன.

•      இடப்பெயர்ச்சிக்குப் பயன்படும் எட்டு வரிசையிலான குறுயிழைகளுடன் கூடிய வெளிப்புறச் சீப்புத்தகட்டைப் பெற்றுள்ளதால், கோம்ப் ஜெல்லி (சீப்பு வடிவம்) (அ) கடல்
வாதுமை (
Sea walnuts) என்று அழைக்கப்படுகிறது.

•      உயிரொளிர்தல்: உயிரிகளிலிருந்து ஒளி உருவாகும் உயிரொளிர்தல்பண்பு -டீனோஃபோரவின் சிறப்புப் பண்பு.

•      நிமட்டோசிஸ்ட்டுகள் இல்லாத நிலையில், இவை சிறப்புத் தன்மை வாய்ந்த லாஸ்ஸோ (Lasso cells) செல்கள் (அ) கொலோபிளாஸ்ட் (Colloblasts) செல்களைப் பெற்றுள்ளன.

•      இரையைப்பிடிக்கப் பயன்படுகின்றன.

•      செல் உள் செரித்தல் (ம) செல் வெளி செரித்தல்.

•      இருபால் உயிரிகளான பால்இனப்பெருக்கம்   மட்டுமே நடைபெறுகிறது.

•      புறக்கருவுறுதலைத் தொடர்ந்து, மறைமுகக் கருவளர்ச்சி நடைபெறுகிறது.

•      சிடிப்பிட் லார்வா (Cydippid) பருவம் காணப்படுகிறது. (எ.கா.) புளூரோபிராக்கியா

•      எடுத்துகாட்டுகள்: புளூரோபிராக்கியா மற்றும் மனோபிளானா.

தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ் 

(தட்டை புழுக்கள்)

•      (கிரே. பிளாட்டி: தட்டையான, ஹெல்மின் : புழுக்கள்) 

    (G.Platy-broad or flat; helmin-worm)

•      முதுகுப்புற - வயிற்றுப்புறவாக்கில் தட்டையான உடலமைப்பைப் தட்டைபுழுக்கள்.

•      உறுப்பு அளவிலான உடற்கட்டமைப்புடன் கூடிய உடற்குழியற்ற, இருபக்கச் சமச்சீருடைய மூவடுக்கு விலங்குகள்.

•      இப்புழுக்கள் ஒற்றைத் திசையில் நகரும் தன்மையுடையவை.

•      மனிதன் உள்ளிட்ட விலங்குளில் ஒட்டுண்ணிகள்.

•      ஒட்டுண்ணிகளில் உள்ள கொக்கிகளும், உறிஞ்சிகளும் ஒட்டுறுப்புகளாகச் செயல்படுகின்றன.

•      உயிரிகளில் கண்டங்கள் இல்லை.

•      சில உயிரிகள் - போலியான உடற்கண்டங்கள்.

•      சில ஒட்டுண்ணிப் புழுக்கள் விருந்தோம்பியின் உடலிலிருந்து உணவூட்டப் பொருட்களை நேரடியாகத் தோல்பரப்பின் வழியாக உறிஞ்சும்.

•     கல்லீரல் புழு போன்ற தட்டைப் புழுக்கள் முழுமையற்ற செரிமான மண்டலத்தைக் கொண்டுள்ளன.

•      கழிவுநீக்கமும், ஊடுகலப்பு ஒழுங்குபாடும் - கழிவு நீக்கச் செல்களான சுடர் செல்களால் (Flame cells) நடைபெறுகின்றன .

•      இருபால் உயிரிகள்- உட்கருவுருதல்.

•      செர்க்கேரியா, ரீடியா, மிராசீடியம், ஸ்போரோசிஸ்ட் - லார்வாக்களைக் கொண்ட மறைமுக வளர்ச்சி.

•      வாழ்க்கைச் சுழற்சியில் பலகரு நிலையும், (Polyembryony) பிளனேரியா போன்ற விலங்குகளில் இழப்பு மீட்டல் பண்பும் காணப்படுகின்றன.

•      எடுத்துகாட்டுகள்: டீனியா (நாடாபுழு), ஃபேசியோலா (கல்லீரல் புழு), சிஸ்டோசோமா (இரத்தப் புழு).

      தொகுதி ஆஸ்கெல்மின்தஸ்

(உருளைப் புழுக்கள்)

•      (Phylum: Aschelminthes-Round Worms)
(
கிரே. ஆஸ்கஸ் குழி; ஹெல்மின்தஸ் - புழுக்கள்)
(
G.Askes-cavity; helminths-worms)

•      இப்புழுக்களின் உடல் வெட்டுத்
தோற்றத்தில்
, வட்ட வடிவில் காணப்பட்டதால் உருளைப்புழுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

•      நெமட்டோடா என்று அழைக்கப்பட்ட  இத்தொகுதி புழுக்கள்- ஆஸ்கெல்மின்தஸ் என அழைக்கப்படுகின்றன.

•      தனித்தோ அல்லது நீர், நிலத் தாவரங்கள் (ம)
விலங்குகளில்
ஒட்டுண்ணியாகவோ
வாழக்கூடியவை.

•      இருபக்க சமச்சீருடைய, மூவடுக்கு உயிரிகளான - உறுப்பு மண்டல அளவிலான உடற்கட்டமைப்பையும், போலி உடற்குழியையும் கொண்டவை.

•      கியூட்டிகிள்- ஒளி ஊடுருவும் தன்மையுடைய
கடினமான
, பாதுகாப்பான கொலாஜன் சவ்வினால்
மூடப்பட்டுள்ளன.

•      உடலில் கண்டங்களில்லை.

•      கழிவுநீக்கம் _ ரென்னட் சுரப்பிகள் (Rennet glands).

•      முழுமையான வளர்ச்சியடைந்த செரிமான மண்டலத்தில், நன்கு வளர்ச்சியடைந்த வாய், தசையினாலான தொண்டை (ம) மலவாய்
உள்ளன.

•      ஒருபால் உயிரிகள் - ஆண் பெண் புழுக்களுக்கிடையே பால் வேறுபாட்டு தன்மை

•      பெண் புழு ஆண் புழுவைவிடச் சற்று நீண்டதாகும்.

•      அகக்கருவுறுதல் நடைபெறும்.

•      முட்டையிடக் கூடியவை (எ.கா.அஸ்காரிஸ்),

•      சில புழுக்களில் தாயுள் முட்டை வளர்ச்சி நடைபெறும் (Ovoviviparous). (எ.கா.உச்சரீரியா).

•      நேரடியான (அ) மறைமுகவளர்ச்சி.

    எடுத்துகாட்டுகள்: அஸ்காரிஸ் லும்பிரிகாய்டஸ் (Ascaris lumbricoides - உருளைப் புழுக்கள்), என்ட்ரோபியஸ் வெர்மிகுலாரிஸ் (Enterobius vermicularis - ஊசிபுழு) உச்சரீரியா பான்கிராட்டி (Wuchereria bancrofti - யானைக்கால் புழு), ஆன்கைலோஸ்டோமா டியோடினேல் (Ancylostoma deuodenale - கொக்கிப்புழு)

      தொகுதி: அன்னலிடா - (வளைதசை புழுக்கள்)

•      (Phylum:Annelida-(Segmented worm) )
(
இல. அன்னூலஸ் வளையம் மற்றும் கிரே.
எடியோஸ்-வடிவம்) (
L.annulus-a ring, and G.edios - form)

•      பரிணாமத்தில் கண்டங்களுடைய முதல்
விலங்குகள் வளை தசைப் புழுக்கள்
.

•      நீரிலோ, நிலத்திலோ, தனித்து வாழும் தன்மை.

•      சில ஒட்டுண்ணியாகவும் வாழ்கின்றன.

•      இருபக்க சமச்சீருடைய மூவடுக்கு விலங்குகள்

•      சைசோசீலோமிக் வகை உடற்குழியுடன்
உறுப்பு மண்டல அளவிலான உடற்கட்டமைப்பு.

•      உடற்குழி திரவத்துடன் கூடிய உடற்குழி ஒரு நீர் சட்டகமாகச் செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகிறது.

•      கண்டங்களாக்கம் (அ) மெட்டாமெரிசம்: உயிரிகளின் நீண்ட உடல்பரப்பு பல கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உடலின் உட்புறமும் கண்ட இடைச்சுவரால் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வே கண்டங்களாக்கம் (அ) மெட்டாமெரிசம் (Metamerism).

•      உடற்சுவரில் - வட்ட மற்றும் நீள்வசத்தசைகள்- பெயர்ச்சிக்குப் பயன்படுகின்றன.

•      நீரிஸ் - நீர்வாழ் விலங்குகளில் பாரபோடியா - பக்க இணையுறுப்புக்கள் நீந்துவதற்குப் பயன்படுகின்றன.

•      மண்புழு, அட்டை - வளைதசைப்புழுக்களில் கைட்டின் -பொருளாலான முட்கள் (ம) உறிஞ்சிகள் இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகின்றன.

•      ஹிமோகுளோபின் (ம) குளோரோகுரூரின் (green)
- சுவாச நிறமிகள் - மூடிய வகை இரத்தச் சுற்றோட்ட மண்டலம்.

•      நரம்பு மண்டலத்தில் ஓரிணை நரம்பு செல் திரள்கள் காணப்படுகின்றன.

•      மண்புழு - இருபால் உயிரிகளாகவும், நீரிஸ் (ம) அட்டை - ஒருபால் உயிரிகளாகவும் உள்ளன.

•      பால்முறை இனப்பெருக்கம்.

•      கருவளர்ச்சி நேரடியானதாக (அ) ட்ரோகோஃபோர் லார்வாக்களுடன் கூடிய  மறைமுகமானது.

•      எடுத்துக்காட்டுகள்: லாம்பிட்டோ மாரிட்டியை (Lampito mauritii - மண்புழு), நீரீஸ் (Neries), ஹிருடினேரியா (Hirudinaria - அட்டை).

      தொகுதி: கணுக்காலிகள்

•      (Phylum:Arthropoda) (கிரே. ஆர்த்ரோஸ் : கணு; போடஸ் - கால்கள்) (G.arthros -jointed; podes-feet)

•      விலங்குலகத்தின் பெரிய தொகுதி கணுக்காலிகள்.

•      இதில் 2-10 மில்லியன் எண்ணிக்கை கொண்ட பூச்சிகள் - பெரிய பிரிவு.

•      கண்டங்களுடன் கூடிய இருபக்கச் சமச்சீருடைய, மூவடுக்கு விலங்குகள்.

•      உறுப்பு மண்டல அளவிலான உடற்கட்டமைப்பையும், சைசோசீலோம் உடற்குழியையும்கொண்டவை,

•      கணுக்களுடன் கூடிய இணையுறுப்புகளைப் பெற்றிருக்கின்றன. பெயர்ச்சி, உணவூட்டம் மற்றும் உணர்வறிதல் நடைபெறுகின்றன.

•      உடல் பாதுகாப்பிற்கும் நீரிழப்பைத் தடுக்கவும், புறச்சட்டகத்தினால் உடல் மூடப்பட்டுள்ளது.

•      தோலுரித்தல் நிகழ்வின் மூலம் புதுப்பிக்கப் படுகிறது. தோலுரித்தல் (Moulting) அல்லது எக்டைசிஸ் (Ecdysis).

•      உடல் தலை, மார்பு (ம) வயிறு - மூன்று பகுதிகள்.

•      உடற்குழியில் ஹீமோலிம்ப் – திரவம்

•      சுவாச உறுப்புகளாகச் செவுள்கள், புத்தகச் செவுள்கள், புத்தக நுரையீரல்கள் (ம) மூச்சுகுழல் (Trachea).

•      திறந்த இரத்த ஓட்டமண்டலம்.

•      உணர் உறுப்புக்களாக-உணர்நீட்சிகள், கண்கள்.

•      கண்கள் எளிய கண்களாகவோ (அ) கூட்டுக்கண்களாகவோ காணப்படுகின்றன.

•      உடல் சமநிலை உறுப்பான ஸ்டேட்டோசிஸ்ட்டுகள் (எ.கா. கிரஸ்டேசியா).

•      மல்பீஜியன் குழல்கள், பச்சை சுரப்பிகள்
(ம) காக்சல் சுரப்பிகள் - கழிவுநீக்கம்.

•      ஒரு பால் உயிரிகளாகும்.

•      அகக்கருவுறுதல்

•      முட்டையிடும் தன்மை - நேரடியான மற்றும் மறைமுகக் கருவளர்ச்சி.

•      வாழ்க்கை சுழற்சியில் பல லார்வாக்கள் நிலையைத் தொடர்ந்து வளர் உருமாற்றம் (Metamorphosis) நடைபெறுகிறது.

•      எடுத்துக்காட்டுகள் : லிமுலஸ் (Limulus - அரச நண்டு - வாழும் புதைபடிவம்), பாலம்னேயஸ் (Palamnaeus - தேள்), யூபேகுரஸ் (Eupagurus - துறவி நண்டு), லெபிஸ்மா (Lepisma - வெள்ளி மீன்), ஏபிஸ்
(
Apis - தேனீ), மஸ்கா (Musca) (வீட்டு ஈ).

•      நோய்க்கடத்திகள் (Vectors) - அனாபிலிஸ், கியூலக்ஸ், ஏடிஸ் (கொசுக்கள்).

•      பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகள்:
ஏபிஸ் (தேனி)
, பாம்பிக்ஸ் (பட்டுப்பூச்சி) லாக்சிபர் (அரக்கு பூச்சி), லோகஸ்டா (வெட்டுகிளி).

•      உங்களுக்குத் தெரியுமா?

•      சிலந்திப்பட்டு நூலானது, அதே குறுக்களவு கொண்ட எஃகை விட ஐந்து மடங்கு உறுதியானது.

•      பென்சில்அளவு கொண்ட இழையானது போயிங் 747 விமானத்தை இழுத்து நிறுத்தக்கூடியது குறிப்பிடப்பட்டுள்ளது.

•      மனிதனால் உருவாக்கப் பட்ட மிக உறுதியான கெவ்லர் (Kevlar) என்னும் பாலிமருக்கு ஈடான வலிமை கொண்டது சிலந்திப் பட்டாகும்.

      தொகுதி: மெல்லுடலிகள் (Mollusca)

•      மெல்லுடலிகள்- (இல. மொலஸ்க்ஸ் (L. molluscs - soft bodied)

•      விலங்குலகத்தின் இரண்டாவது பெரிய தொகுதியாகும்.

•      சில நீரிலும் (நன்னீர் அல்லது கடல் நீர்) மற்றும் சில நிலத்திலும் வாழும் தன்மையுடையன.

•      உறுப்பு மண்டல அளவிலான உடற்கட்டமைப்பு

•      ஒற்றை ஓடுடலிகளைத் (எ.கா.ஆப்பிள் நத்தை) தவிரப் பிற அனைத்து மெல்லுடலிகளும் இருபக்க சமச்சீருடையவை.

•      உடற்குழியுடன் கூடிய மூவடுக்கு உயிரிகள்.

•      கண்டங்களற்ற உடல் தலை, தசையாலான பாதம், உள்ளுறுப்புத் தொகுப்பு -மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

•      உடல் முழுவதும் கால்சியத்தினாலான கடின ஓட்டினால்  மூடப்பட்டுள்ளது.

•      மேன்டில்: உள்ளுறுப்புத் தொகுதியானது மென்மையான தோல் போன்ற அமைப்பால் மூடப்பட்டுள்ளது.

•      மேன்டில் இடைவெளி (mantle cavity): உள்ளுறுப்பு தொகுப்பிற்கும் மேன்டிலுக்கும் (pallium) இடைப்பட்ட இடைவெளி.

•      எண்ணற்ற இறகு வடிவ, சுவாசத்திற்குப் பயன்படுகிற
டினிடியா (
Ctenidia) – செவுள்கள்.

•      வாயில் அரம் போன்ற கைட்டினாலான குறுக்கு வரிசையில் அமைந்த பற்களைக் கொண்ட ராடுலா (Radula) எனும் அமைப்பு.

•      இரட்டை ஓடுடைய  மெல்லுடலிகளில் (எ.கா. முத்து சிற்பி) ராடுலா காணப்படுவதில்லை.

•      தலையின் முன்பக்கத்தில் உணர்நீட்சிகள், கண்கள் (ம) ஆஸ்ஃபிரேடியம் (Osphradium) ஆகிய உணர் உறுப்புகள்

•      இரட்டை ஓடுடைய  மெல்லுடலிகளிலும் வயிற்றுக் காலிகளிலும் (எ.கா. ஆப்பிள் நத்தை) நீரின் தரத்தைக் கண்டறிவதற்கு ஆஸ்ஃபிரேடியம் பயன்படுகிறது.

•      கழிவு நீக்கம் – நெஃப்ரீடியம்

•      ஆக்டோபஸ், செபியா (cuttle fish) (ம) கணவாய் மீன் (squids) - தலைக்காலிகள் தவிர அனைத்து மெல்லுடலிகளிலும் திறந்தவகை இரத்த ஓட்ட மண்டலம்.

•      இரத்தத்தில் தாமிரத்தைக் கொண்ட ஹிமோசையனின் –சுவாச நிறமி (blue).

•      முட்டையிடும் வகையைச் சேர்ந்த இவை தனிப்பால் உயிரிகளாகும்.

•      வெலிஜர் லார்வா(Veliger) - மறைமுகக் கருவளர்ச்சி

•      வெலிஜர் லார்வா -ட்ரோகோபோர் (Trochophore) லார்வாலின் மாறுபட்டநிலை.

•      எடுத்துக்காட்டுகள்: பைலா (Pila - ஆப்பிள் நத்தை), லாமெல்லிடன்ஸ் (Lamellidens - மட்டிகள்), பிங்க்ட்டடா (Pinctada - முத்துசிப்பி), செப்பியா (Sepia - கணவாய் மீன்), லாலிகோ (Loligo - ஸ்குயிட்), ஆக்டோபஸ் (Octopus - பேய் மீன்).

•      உங்களுக்குத் தெரியுமா?


பலவண்ண கூம்பு வடிவ
நத்தை கோனஸ் மார்மோரியஸ் (Conus marmoreus) (marbled cone snail)  நத்தையானது வெளியேற்றும் அபாயகரமான நச்சு, பார்வை கோளாறையும் தசை மற்றும்
வலிப்பு சுவாசத்தடை ஆகியவற்றை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தும்.
குணப்படுத்தக்கூடிய எதிர்நச்சு கிடையாது.

      தொகுதி: எக்கினோடெர்மேட்டா - (முட்தோலிகள்)

•      (Phylum Echinodermata) (கிரே. எக்கினோஸ் : முட்கள் ; டெர்மோஸ் :
தோல்) (
G.Echinos-spiny; dermos-skin)

•      இவையனைத்தும் கடல்வாழ் உயிரிகளாகும்.

•      முதிர் விலங்குகள் - ஆரச்சமச்சீர் தன்மை, லார்வாக்கள் இருபக்க சமச்சீர் தன்மை.

•      உறுப்பு மண்டல அளவிலானஉடற்கட்டமைப்பு.

•      நடு அடுக்கிலிருந்து தோன்றிய கால்சியத்தினால் ஆன முட்களுடன் கூடிய புறச்சட்டகம் கொண்டுள்ளதால் முட்தோலிகள் என அழைக்கப்படுகின்றன.

•      மிக முக்கியப் பண்பு: குழல் கால்கள் (அ) போடியா எனப்படும் கால்களுடன் கூடிய நீர்க்குழல் மண்டலம் (அ) ஆம்புலேக்ரல் மண்டலம்.

•      இடப்பெயர்ச்சி, உணவைப்  பிடித்துக் கடத்தல் (ம சுவாசம் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது.

•      வயிற்றுப்புறத்தில் வாய்ப்பகுதியையும் முதுகுப்புறத்தில் மலத்துளையையும் கொண்ட முழுமையான செரிமான மண்டலம்.

•      நரம்பு மண்டலமும், உணர்வு மண்டலமும், முழுமையாக வளர்ச்சியடைய வில்லை.

•      தனிக்கழிவு நீக்க மண்டலம் கிடையாது.

•      இதயம் (ம) இரத்தக் குழல்களற்ற திறந்தவகை இரத்த ஓட்டமண்டலம்.

•      தனிப்பால்உயிரிகளான இவற்றில் பாலினப் பெருக்கமும், புறக் கருவுறுதலும் நடைபெறுகின்றன.

•      இருபக்க சமச்சீருடைய தனித்து நீந்தும் லார்வாக்களுடன் கூடிய மறைமுகக்கருவளர்ச்சி.

•      சிலமுட்தோலிகளில் இழப்பு மீட்டல் பண்புடன் கூடிய தன்னுறுப்பு துண்டிப்பு தன்மை (Autotomy) காணப்படுகிறது (எ.கா. நட்சத்திர மீன்).

•      எடுத்துக்காட்டுகள் : ஆஸ்ட்ரியஸ் (Asterias - நட்சத்திர மீன் (அ) கடல் நட்சத்திரம்), எக்கினஸ் (Echinus - கடல் குப்பி), ஆன்டிடோன் (Antedon - கடல் அல்லி), குக்குமேரியா (Cucumaria - கடல் வெள்ளரி), ஒஃபியூரா (Ophiura) (உடையும் நட்சத்திரம்), (Brittle star).

 

Comments

Popular posts from this blog

Class XII Bio-Zoology & Zoology - Powerpoint

Class XI - Zoology - Powerpoint

12th Standard, பாடம் - 1, உயிரிகளின் இனப்பெருக்கம்- Book back One word Online test

11ம் வகுப்பு, பாடம் 1, உயிருலகம் - Book back One word Online test

Class XII - Botany Powerpoint